பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? கோண் என்றால் பொருள் புரிகிறதா 'பேரிகையே’’? அணுவை நூறு பாகங்களாக்கினால், அந்த ஒரு பாகத்திற்குக் கோண் என்று பெயர்:

இந்த சொல்லையே உருவாக்கியவர்கள் கபிலரும் - கம்பர் பெருமானும்தான்் என்பதை, "மெயில் ஏடு எப்படி அறியும்? எனவே, அறிஞர் அண்ணா அவர்களை, நாம் திருவள்ளுவர் என்றோ, - கம்பர் என்றோ சொல்லாத போது, 'மெயில் ஏடே” நீயே அவலை நினைத்துக் கொண்டு உரலை ஏன் இடிக்கின்றாய்? நியாயமா இது?

கம்பதசம்: கம்பன் காவியத்திற்கு ஒரு கோணத்திலே எழுதப்பட்ட விமரிசன நூல்:

கம்பரசத்தைப் படித்திருந்தால், குறைகூறும் மூளைகள் சற்றே சிந்தனை செய்யும்!

கம்பனுக்கு விமரிசனமா? என்று கேட்டால், கம்பன் என்ன? அவன் அப்பனுக்கும்கூட விமரிசனம் எழுத, ஓர் இலக்கியத் தும்பிக்கு உரிமை உண்டு.

இலக்கியத்தில் எப்படிப்பட்ட வம்பனுக்கும் - கொம்பனுக்கும் விமரிசனம் எழுதுபவன்தான்், உண்மையான - உயிரோட்ட மான எழுத்தாளனாவான்!

கம்பன் எழுதிய காவியமென்ன மறைமொழியா? வேதம் என்ற நினைப்பா?

திருவள்ளுவர் முன்னால், கம்பனின் எடை எத்தனையோ மடங்கு மிக மிகக் குறைவு!

அண்டாண்டம் வாழ வழி காட்டிய மனித குல மேதை - திருவள்ளுவர் பெருமான்!

பிண்டாண்டத்தை எப்படி பிதற்றல் வாழ்வற்று வாழ வைப்பது என்று சிந்தித்து - மூல நூல் தந்த மூதறிஞர் அவர்!

கம்பர் அப்படியா? வால்மீகியின் மூலத்தைத் தழுவி, பாத்திரங்களைப் புனிதங்களாக்கி வழி நூலொன்றை எழுதி, வைணவத்திற்கு வழங்கிச் சென்றவர்.