பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உலகத் தமிழ் மாநாட்டில்

கவிஞர் அப்துர் ரகுமான்

முனையொடிந்த அறிவு, சில நேரங்களில் கனை தொடுக்கும் போது, கடுமையான விமரிசனத்திற்கு அந்த மூளையின் சொந்தக்காரரை ஆளாக்காமல் விட்டு விடுவதே பஞ்சமா பாதகத்தில் ஒன்றாகிவிடும்!

சென்னை மாநகரில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு - வானை நோக்கி வட்டமிடும் புகழாகிவிட்டது.

உலகத் தமிழ் மாநாடு, ஒர் ஆராய்ச்சிப் பேழையாகிவிட்டது.

உலகத் தமிழ் மாநாடு, அறிவாளிகள் நடமாடும் அரங்கமாகக் காட்சி தந்தது!.

அத்தகைய மாநாட்டில், இழிவான ஒரு நிலைமை ஏற்படு மானால், அது அந்த மாநாட்டின் தரத்தை மட்டும் குறைப்பதாகாது:

தமிழ் மொழியின் தரத்தையும் - திறத்தையும் குறைத்துவிடும் ஊனமான ஈனச் செயலாகிவிடும்!

உலகத் தமிழ் மாநாடு நிலை இவ்வாறிருக்க, உண்மைக்கு நேர் விரோதியாக நடமாடிடும் தற்காலிக அரசியல் எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 'ஜெயபேரிகை’’ என்ற நாளோடு, அந்த மாநாட்டைக் காளங்கப்படுத்திடக் கத்தியைத் தீட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டது.