பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி §§

இலக்கியமே தெரியாத காமராசர் முன்பு, கண்ணதாசன் தனது கவிதைகளை வைக்கும்போது, தமிழகத்தின் முன்னாலே, இலக்கியத்தை வைத்தக் கலைஞர் குற்றவாளி அல்லர்!

இலக்கிய அறிவோடு எழுதத் தெரியாதவர்கள் எல்லாம். சினிமா உலகில் இருப்பதால், சினிமா வசனம் கேவலமாக மதிக்கப்படுகின்றதா?

சிலப்பதிகாரக் காப்பிய நாடகம் நூல் வடிவிலே இருக்கும் போது - அது சிலப்பதிகாரமாகும்!

அதே சிலப்பதிகாரம் நிழற் பட வடிவிலே நடமாடும் போது - பூம்புகார் ஆகும்:

வெளி நாட்டுத் தமிழறிஞர்கள் கைகளிலே அது தவழும்போது, சிலப்பதிகாரக் காப்பிய நாடகமாகும்.

கலைஞர் கை வண்ணத்தால், சிலப்பதிகாரக் காப்பியம் தகுதி பெற்றது!

சிலப்பதிகாரக் காப்பியத்தால், கலைஞரும் தகுதி பெற்றார்.

ஊமை மூளைக்கும், முட மூளைக்கும், இது பொறாமையை உருவாக்குகின்றது என்றால், அதற்காகக் குட்டிச் சுவற்றிலே மோதிக் கொள்ள வேண்டுமே தவிர, கலைஞரிடம் கரடி விட்டு என்ன பயன்?

'வெளிநாட்டுக்காரன், இது சினிமா வசன மொழி பெயர்ப்பு தான்் என்று அறிந்தால் சிரிப்பானா? சிரிக்க மாட்டானா? என்று கேட்கும் திரு. கண்ணதாசனாரே!

வெளிநாட்டுக்காரன் சிரிக்கின்றானோ - இல்லையோ, அது இருக்கட்டும் - உமது சிரிப்பைப் பார்த்தால் தான்் பரிதாபமாக இருக்கிறது!

கீழ்பாக்கம் சிரிப்பை இலக்கியத்திலே காட்டினால், இலக்கியச் சிரிப்பு சிரிப்பவர்கள் மருத்துவ அறை கொடுப் பார்கள் - உமது சிந்தனை மீது! ஜாக்கிரதை!