பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதியவன் எண்ணம்

மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது என்பது, பத்திரிகைத் துறையிலே ஒரு வகை. இதற்கு அரசியல், ஆன்மிகம், இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம் மற்றும் பொது அறிவு உணர்வுகள் தேவை.

இந்த வகைக் கட்டுரைகள் எழுதுவதற்கு புகழ் பெற்ற எழுத்தாளர்களே நமக்கு வழிகாட்டிகளாக அமைந் துள்ளார்கள்.

வட நாட்டிலே பன்மொழி மேதையாக வாழ்ந்த இராஜா ராம் மோகன்ராய், தனது பத்திரிகைகளான "தி பிராமணிக்கல் மேகசின்', 'சம்வாத கெளமதி' என்ற வங்க மொழி ஏடு களாலும், மிராத் - உல் அக்பார்’ என்ற பார்சி மொழி இதழாலும்; “இந்து மதத்திலுள்ள உருவ வணக்க வழிபாடு” முறைகளை எதிர்த்தும், "இயேசு நாதர் தீர்க்கதரிசியே தவிர, கடவுளல்ல என்ற கொள்கைக்காக கிறித்துவர்களைக் கண்டித்தும் எதிர்த்தும் 1815-ஆம் ஆண்டு முதல் 1825-ஆம் ஆண்டுகள் வரை போராடி அவற்றின், உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

அதற்குப் பிறகு, வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில், 1867-ஆம் ஆண்டு முதல் 1874-ஆம் ஆண்டு வரை, யாழ்ப் பாணம் ஆறுமுக நாவலர் பெருமான், வள்ளலார் பாடல்கள் அருளால் பாடப்பட்ட அருட்பா’ பாடல்களல்ல. மருளால் பாடப்பட்ட மருட்பாக்கள் என்று ஆன்மிகத் துறையில் தனது எதிர்ப்பை எழுப்பி, கடலூர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மேடை தோறும் வாதப் போர் செய்தும், தமிழ்நாட்டில் மருட்டா அணி என்ற ஓர் அணியை உருவாக்கி, மறுப்புக் கருத்துக்களை வெளியிட்டார்.