பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. “கடிதம்’ நாளேட்டில் டாக்டர் மு.வ.வை எதிர்த்துக் கவிஞர் கண்ணதாசன்

'இந்த தமிழ்ப் புலவர்கள் இருக்கிறார்களே, அவர்களை விடப் பேடிகள் உலகத்தில் இல்லை'

'ஒருவர் மந்திரியானால், அவர் கழித்துப் போடுவதுகூட வாசமடிக்கிறதா புலவர்களுக்கு?”

'இடத்துக்கும் நேரத்துக்கும் கூத்தாடும் மு.வரதராசனார் களும் பிறரும் ஆண்களா? பெண்களா? இரண்டுக்கும் பொதுவா?

-12-1-68 கடிதம், நாளேடு இதழில் கவிஞர் திரு. கண்ணதாசன். திரைப்படத் துறை கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள்தான்் மேற்கண்ட வினாக்களை கடிதம்’ என்ற நாளேட்டின் வாயிலாகத் தமிழக மக்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்.

'கோப்பையிலே என் குடியிருப்பு” என்று தன்னையே - தான்், திரைப்படத்திலே அறிமுகப்படுத்திக் கொண்ட கவிஞர் பெருமானே, இந்தக் கேள்விகளை - நீர் எப்போது எழுப்பி - எழுதினர்?

அறியாமை - மயக்கமும் - அகம்பாவக் களைப்பும் நீர் கேட்ட கேள்விகளிலே முடங்கிக் கிடப்பதால்தான்் - நாம்