பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 37

பேடி, அலி, நாய், பன்றி என்று கூற உமக்கு எப்படி ஐயா மனம் வந்தது?

மனம் ஒரு குரங்கடா - குரங்கு என்கிறீரா? அதற்காக வெட்கப்படுகின்றேன் - வேதனைப்படுகின்றேன்! போம்!

இந்தி மொழி தேசிய மடியிலே புரள்வதால் வந்த கோளாரா இது? நீர் தமிழ்க் குலம்தான்ா? அல்லது தேசியம் ஈன்றெடுத்த பாரதமாதா மகனா?

தமிழ் இலக்கியங்களால் உமது மூளையை வளர்த்துக் கொண்டதின் விளைவா இது?

அறிஞர் அண்ணா அவர்களது ஆட்சியைத் தமிழ்ப் புலவர்கள் ஆதரிக்கிறார்கள்! போற்றுகிறார்கள்!

அந்த அழுக்காற்றால், தமிழ்ப் புலவர்கள் குலத்தையே பேடிக் கூட்டம் என்கிறீரே - இது நியாயமா?

தமிழ்ப் புலவர்களை ஒட்டு மொத்தமாக நீர் குறிப்பிடும் போது, தமிழனல்லாத ஒரு பிறவி நம்மை ஆணவமாக எழுதுகிறது என்று, உம்மை அந்தப் புலவர் குழாம் எண்ணி புண்பட்டிருக்காதா என்ன?

4.

‘மாமியார் விட்டுக்குத் தண்ணிர் கொண்டு போகும் குரங்குகள்' என்று புலவர்களை ஏசி எழுதியிருக்கிறீர்!

சொந்த வீட்டிற்குத் தண்ணிர் கொண்டு போவதில் தவறு ஒன்றும் இல்லை - கவிஞரே! அதை முதலில் புரிந்து கொள்ளும்!

ஆனால், "சினிமா உலகில் கந்தல் கசக்கிக் கொடுக்கும்' உம் போன்ற ஒரு சினிமா கவிஞன் புத்தி, தமிழ்ப் புலவர்களிடம் இல்லையே - என்ன செய்ய?

அதற்காகவாவது, நீர் அவர்களுக்கு நன்றி கூற வேண்டாமோ? தன்மானிகள் என்று!

சினிமா கவிஞராக நீர் ஆகி விட்டதாலே, "கருப்புப் பணம்’ என்று படம் எடுக்குமளவுக்கு வளர்ந்து விட்டதாலேயே, வறுமையால் வாடும் புலவர் திருக் கூட்டத்தை ஏசுகின்றிரே - நீர்