பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

வள்ளல் பெருமானுடைய, "அருட்பா அணிக்கு தளபதிகளாக நின்று சொற்போர் களம் கண்டவர்கள், மறைமலையடிகளாரும், சதாவதான்ி செய்குத் தம்பிப் பாவலரும் ஆவர்.

இவ்வாறு, 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த மறுப்புக் கட்டுரைகளுக்குப் பிறகு, 20-ஆம் நூற்றாண்டில், அதாவது 1935-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தந்தை பெரியார் தேசிய முகாமை விட்டு வெளியேறி, இந்திய தேசிய அணியினர் தன்னைப் பற்றிக் கூறி வந்த கருத்துக்களை மறுப்பதற்காக, 'குடியரசு' என்ற வாரப் பத்திரிகையைத் துவக்கி, அதில் தனது மறுப்பு, மறுப்புக்கு எதிர்ப்பு, எதிர்ப்புக்கு மறுப்பு என்ற கட்டுரைகளைத் தீட்டினார்.

தேசிய அணியின் எழுத்துச் சிற்பியாக அப்போது விளங்கிய திரு.வி.க. அவர்கள், தந்தை பெரியாருக்குரிய மறுப்புக் கட்டுரைகளை ' நவசக்தி, தேச பக்தன்' என்ற ஏடுகள் மூலமாக வெளியிட்டு தேசியக் கருத்துக்களுக்கு அரணாக அமைந்தார். தந்தை பெரியார் எண்ணங்களைத் தீவிரமாக மறுத்து அவர் எழுதி வந்தார்.

அதற்குப் பின்பு, திராவிடரியக்கம் கண்ட பெரியார், ‘விடுதலை’ என்ற நாளேட்டைத் துவக்கினார். தினந்தோறும் 'குத்தூசி என்ற கட்டுரைகளை அந்த ஏட்டிலே குத்துளசி குருசாமி மூலமாக எழுதி சனாதனிகளையும், தேசிய அணிகளையும் மறுத்துச் சாடினார்.

தந்தை பெரியாருக்கு ஆதரவாக, அறிஞர் அண்ணா 'திராவிட நாடு’ என்ற வார இதழைத் துவங்கி மறுப்புக் கருத்துக்களைக் கட்டுரை வடிவிலே வடித்தார். அவரைத் தொடர்ந்து 'முரசொலி நாளேடு முழுக்க முழுக்க தேசிய அணியினரை மறுத்துக் கட்டுரைகளை எழுதி, ஒரு விழிப்புணர்வு அரசியலை நடத்தி வந்தது - இந்தி எதிர்ப்புப் போர் நடந்தபோது, தமிழ் எல்லையில் 'அது கடுமையான