பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31Oமுருகு சுந்தரம்

பெற்றுக் கொண்டிருந்தது. அவ்வாட்சியால் பாரிசில் ஏற்பட்ட குழப்பமும், கொலையும், பட்டினியும் ரெம்போவின் உள்ளத்தில் ஒரு வறட்சியையும் நம்பிக்கையின்மையையும் தோற்றுவித்தன. மக்களாட்சியின் அடிப்படையில் தோன்றும் எந்த அமைப்பையும் அவன் வெறுத்தான். தனிமையும் அவநம்பிக்கையும் அவனுள்ளத்தில் ஒரு வகை அராஜகத்தத்துவத்தைத் தோற்றுவித்தன. பாரிசு நகரமெங்கும் சாவையும் கண்ணீரையுமே சந்தித்தான். வழியில் இறந்து கிடந்த ஒரு படைவீரனின் பிணத்தைப் பார்த்து உள்ளம் கசிந்தது. சமவெளியில் தூங்குபவன் (The Sleeper and The Valley) என்ற பாடலை எழுதினான்.

1871-இல் மூன்றாம் முறை வீட்டை விட்டு ஓடியபோது மிகையான காதற் களியாட்டத்தில் மூழ்கியதால் பெண்மையின் மீது சலிப்பும் விரக்தியும் அவனுக்கு ஏற்பட்டது. காத்திருப்பவர்கள் (Sitters) என் சிறிய காதலிகள் (My Little Loveiies) அனத் யோ மென் ரதி (Wenus Anadyomene) என்ற கவிதைகளில் பெண்கள் மீது கொண்ட வெறுப்பைப் பதிவு செய்வதோடு, அவர்கள் போலித்தனத்தையும், சாகசத்தையும் தோலுரித்துக் காட்டுகிறான். காதலுக்குப் புதுப் பொருள் கண்டறிய வேண்டும் என்று கூறுகிறான். அப்போதுதான் வெர்லேனின் புதிய உறவு அவனுக்கு ஏற்படுகிறது.

முதிரிளமைப் பருவத்தில் ஏற்படக் கூடிய முழுமை பெறாத பாலுணர்வு விருப்பங்களும் அச்சங்களும் முதன்முதலாக ரெம்போவின் கவிதைகளில் மிக நுணுக்கமாக இலக்கிய வடிவம் பெற்றன. ஒரு பாடல்:

அவன்
தனது ஏழாவது வயதில்
பாலைகளிலும்
வனாந்தரங்களிலும்
இளமரக் காடுகளிலும்
கடற்கரைகளிலும்
சுதந்தரமாகச் சுற்றித்திரியும்
உயிர்களைப்பற்றிய
இன்பக்கற்பனைகளில் ஈடுபட்டுக்
கவிதைகள் வடித்தான்.

வண்ணப்பட வார இதழ்கள்
அவன் கற்பனையைத்
துண்டிவிட்டன.
அவற்றுள் வெளியாகியிருந்த
ஸ்பெயின் இத்தாலியப்
பெண்களின் அணிவகுப்பு
அவனை-
நாணப் படுத்தியது.