பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43முருகு சுந்தரம்

அவள் புகழ் பெற்ற சிற்பி ரோடினுடைய மாணவி. இருவரும் காதலித்து 1901-இல் திருமண்ம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ‘ரூத்’ என்று குழந்தையும் பிறந்தது. குடும்பு வாழ்க்கை என்னும் கட்டுத்தறியில் ரில்க் நிலையாகத் தங்கும் பழக்கமில்லை. அவர் எம்போதும் பயணம் செய்து கொண்டே இருப்பார். அவர் மேய்ச்சல் தரை பெரியது.

காதலைப்பற்றி ரில்க் கொண்டிருந்த கருத்து புதுமையானது. முழுமை பெறாததும், கைம்மாறு கருதாததும் தான் உன்னதமான காதல் என்பது ரில்க்கின் கருத்து. ‘ஒரு பெண்ணின் தோள்மீது கைவைத்த அளவிலேயே, என்னுடைய காதலின் முழுமையான உணர்ச்சியைத்தெளிவாக அவளுக்கு உணர்த்த முடியும்’ என்று அவர் குறிப்பிடுகிறார். ரில்க்கின் உண்மையான ஆர்வலர்கள் எல்லாரும் பெண்களே. அவர்கள் அவரை நன்கு புரிந்திருந்தார்கள்; அவரிடமிருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அவரிடம் பழகியபோது தங்கள் காதல் நிறைவேறிய உள்ள நிறைவு அவர்களுக்கு ஏற்பட்டது.

புனைவியக் கவிஞராக அரும்பி, அழகியக் கவிஞராக மலர்ந்து இருப்பியக் கவிஞராக மணம் பரப்பி, பதிப்பியக் கவிஞராகக் காய்த்து இறுதியில் தமது சொந்த உள்ளுணர்வுகளுக்கும் அகக் காட்சிகளுக்கும் கருத்து வடிவம் கொடுக்கும் சங்கேதக் கவிஞராகக் கனிந்து விளங்கினார்.

சிதறிக் கிடக்கும் சிறுகவிதைகள் நிறைய எழுதிக் குவித்திருந்தாலும், ரில்க்கிற்கு அழியாப் புகழைச் சேர்க்கும் கவிதைத் தொகுதிகளாக மூன்றைக் குறிப்பிடலாம். அவை ‘மால்டே லாரிட்ஸ் பிரிக்கின் குறிப்புகள்’ (The Note books of Malte Lawrids Brigge) ‘டியூனோ இரங்கற்பாக்கள்’ Duino Eeegies ‘ஆர்ஃபிசை நோக்கி எழுதிய ஈரேழ்வரிக் கவிதைகள்’ (Sonnets To Orpheus) என்பன. இவை நிகழ் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிய முன்னோடிக் கவிதைகள்.

மால்டே லாரிட்ஸ் பிரிக், ரில்க்கின் பண்புகளை அப்படியே உள் வாங்கிக் கொண்ட கற்பனைப் பாத்திரம். மேலும் போதலேரின் உருவாக்கத்தையும் இப்பாத்திரப் படைப்பில் காணலாம். இக்குறிப்புகளில் அடங்கியுள்ள கட்டற்ற கவிதைகள் ரில்க்கின் படைப்பாற்றலுக்குச் சவாலாக விளங்குகின்றன. குழந்தைப் பருவத்தைப் பற்றியும், குறிக்கோள் இல்லாத காதலைப் பற்றியும், சாவைப் பற்றியும், துறவிபோல் நடிக்கும் பெண்களைப் பற்றியும் ரில்க் நூதனமாக கருத்துக்களை மால்டே குறிப்புக்களில் வெளியிட்டிருக்கிறார்

இக்குறிப்புகளுள் ‘முகங்கள்’ என்ற பகுதியில், ஒவ்வொரு மனிதனும் பல முகங்களைப் பெற்றிருப்பதாகவும், ஒரு சமயத்தில் ஒன்றை மட்டும் அவன் அணிந்து கொண்டு மற்ற