பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்44

வற்றை இருப்பில் வைத்திருப்பதாகவும் சிலர் அடிக்கடியும் அவசியம் ஏற்படும் போதும் தமது முகங்களை மாற்றிக் கொள்வதாகவும் சுவைடக் கூறியுள்ளார். பாரிஸ் நகரில் நாட்டர்டாம் தெருமுனையில், தனது முகத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பெண்ணைச் சந்தித்ததாக ஒரு மிகைக்கற்பனையை சில்க் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:

தெரு வெறிச்சோடிப்போய் அமைதியாக இருந்தது; அந்த வெறுமை எனக்குச் சலிப்பாக இருந்தது; சோர்வோடு அத்தெருவெங்கும் சுற்றித் திரிந்தேன். என் கால்கள் மரக்கட்டைகளாகக் கனத்தன, ஒரு பெண் தன் கைகளை முகத்துக்குத் தாங்கலாக வைத்துக் குனிந்து கொண்டிருந்தாள்: என்னைக் கண்டதும் திடுக்கிட்டு வெடுக்கென நிமிர்ந்தாள், அப்போது அவள் முகம் கையோடு வந்து விட்டது, அவள் கையில் கிடந்த உட்கவிந்த வெற்று முகத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அதைவிட அது பெயர்த்து எடுக்கப்பட்ட இடம், முகம் இல்லாமல் காத்திருப்பதைக் காண அஞ்சினேன்.”

மேலே குறிப்பிடுவது போன்ற காட்சிகளை அடிமனக் கோட்பாட்டு ஓவியர்களின் படைப்பில்தான் காண முடியும். ஓவியர், ரோடினிடம் சிலகாலம் செயலாளராக இருந்திருந்தாலும், இதுபோன்ற ஓவியங்களைப் பார்த்திருக்க முடியாது. காரணம், ரோடின் செவ்விய ஓவியர் (Classicist). கிரேக்கத் தெய்வமான அப்போலோவின் சிலையைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ரில்க் பாடிய கவிதை யொன்றில்,

இது-
உன்னைப் பார்க்க விரும்பாத இடம்.
உனக்கு இங்கே இடமில்லை;
நீ உன்னை மாற்றிக் கொள்.

என்ற வரிகள் காணப்படுகின்றன. ரில்க்கின் இந்த வரிகளை இலக்கிய வாதிகள் அடிக்கடி மேற்கோளாக எடுத்தாள்வதுண்டு. இந்த வரிகளின் கருத்துக்களே மேலே குறிப்பிட்ட மிகைக் கற்பனையாக விளக்கம் பெறுகின்றன. டியூனோ கோட்டையில் ஒரு நாள் தனிமையில் அமர்ந்திருந்த போது, தம் உள்ளத்தில் நிகழ்த்த கவிதை ஆவேசத்தைக் கீழ்க் கண்டவாறு படர்க்கையில் பதிவு செய்கிறார் ரில்க்.

“இனம் புரியாதொன்று அவனிடம் அன்று நிகழ்ந்தது.வழக்கம் போல் ஒரு புத்தகத்தைக் கையிலேந்திய வண்ணம் அங்கு மிங்குமாக நடந்த கொண்டிருந்த அவன், கவையாகப் பிரிந்திருந்த மரக்கிளை. யொன்றில் வசதியாக அமர்ந்து