பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமெரிக்கா-
ஒரு பயித்தியக்காரவிடுதி





எஸ்ரா பவுண்ட்
(1885-1972)


எஸ்ரா பவுண்ட் ஒரு புதிர். முரண்பாடுகளின் முடிச்சு யேட்ஸ், ஃப்ராஸ்ட் போன்ற மனிதாபிமானம் மிக்க கவிஞர்களோடு நெருங்கிப்பழகிய அவர் மனித சமுதாயத்தின் விடுதலை உணர்வை முற்றிலும் அழிக்க முயன்ற ஃபாசிசவாதியான முசோலினியோடும் நெருங்கிப் பழகினார். பவுண்ட் சிறந்த கவிஞர்; அறிஞர்; சீர்திருத்தவாதி.

“கவிஞர்களுள் ஒரு சிலரே வாழக்கூடிய துணிச்சலான வாழ்க்கையை நம் காலத்தில் வாழ்ந்து காட்டியவர்” என்று அமெரிக்கக்கவிஞர் வில்லியம் கார்லோஸ் வில்லியம் எசவிம், “இந்தநூற்றாண்டில் அல்லது இதற்குமுந்திய நூற்றாண்டின் இறுதியில் பிறந்த கவிஞர்கள் எல்லாரும் பவுண்டினால் பாதிக்கப்பட்டு அவர் எழுத்துக்களிலிருந்து நிறையக்கற்றுக் கொண்டனர். அதை எந்தக் கவிஞனாவது மறுத்துக் கூறினால், அவன் கண்டனத்தைதைவிடப் பரிதாபத்திற்கே உரியவன்” என்று ஹெமிங்வேயும் கூறியுள்ளார்.

அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற கவிஞரான ஃபிராஸ்ட் பவுண்டை ஒரு ‘புயற்பறவை’ என்று கருதினார். பவுண்டிற்காக அவர் எழுதிய கவிதையொன்றில், ‘உண்மையைக் கூறுகிறேன்; உன்னைக் கண்டு நான் மிகவும் அஞ்சுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்'

இப்படி உலகப்பேரறிஞர்களால் ஒருமுகமாகப் பாராட்டப்பட்ட எஸ்ரா லூமிஸ் பவுண்ட் (Ezra Loomis, Round) 1885 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் ஐக்கிய அமெரிக்காவில்