பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்62

டார். அமெரிக்காவை விட்டு வெளியேறி நீண்டநாள் நாடோடியாகத் திரிந்த தனிமை வெறுப்பு அவரை அவ்வாறு பேச வைத்துவிட்டது என்று எல்லாரும் எண்ணினர். தம்மைக் குறை கூறி விமர்சிப்பதைப் பவுண்ட் எப்போதும் தாங்கிக் கொள்ளமாட்டார். மீண்டும் இத்தாலிக்கே திரும்பிவிட்டார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஃபாசிஸ வாதிகளுக்கு ஆதரவாகவும், அமெரிக்கர்களுக்கு எதிராகவும் ரோம் நகர வானொலியில் வாரம் இரு முறை பிரசாரத்தில் ஈடுபட்டார் பவுண்ட். அமெரிக்க நாட்டையும், அதன் மக்களாட்சி முறையையும், ஆட்சித்தலைவர் ரூஸ்வெல்ட்டையும் கடுமையாக விமர்சித்து வசைமாரி பொழிந்தார். அவர் பேச்சில் யூதவெறுப்பு கொப்பளித்தது; அவர் கவிதைகளிலும் இவ்வெறுப்புக்கள் பொங்கி வழிந்தன.

இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகள் வெற்றி பெற்றதும், 1945-ல் தேசத்துரோகக்குற்றத்துக்காக அமெரிக்கப்படையினரால் கைது செய்யப்பட்டு, பைசா நகருக்கு அருகில் இருந்த இராணுவச் சிறைச்சாலைக்குக் (Army Disciplinary Barracks) கொண்டு செல்லப்பட்டார். அங்கே கடும் குற்றவாளிகளுக்கெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட எஃகு வலைக் கூண்டில் அடைக்கப்பட்டார். அப்போது பவுண்டுக்கு வயது அறுபது. ஆறு திங்கள் இக்கூண்டில் அடைக்கப்பட்ட பவுண்டின் உடலும், உள்ளமும் பாதிக்கப்பட்டன. மறதியாலும், தனிமை நோயாலும் (Claustro phobia) மிக வருந்தினார். என்றாலும் சிறைக் கூண்டிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிறையிலிருந்து எழுதிய காண்டங்களில் சிறையனுபவம், தனிமைத்துன்பம், ஆன்மத்தேடல் ஆகியவற்றைப்பதிவு செய்கிறார். தமது சிறையனுபவத்தைக் குறிப்பிட்ட பவுண்ட்,

என்னை-
ஆபத்தான கொடூர மனிதன்
என்றெண்ணி
எல்லாரும் வெறுத் தொதுக்கினர்
இரவும் பகலும்
எனக்குக்
காவல் இருந்தது

சிப்பாய்கள்-
அடிக்கடி என்னை வந்து
எட்டிப் பார்ப்பார்கள்.
சிலர் எனக்கு
உணவு கொண்டு வருவர்.
கிழவன் எஸ்...
பரிசுக் குரிய்
ஒரு காட்சிப் பொருள்

என்று உருக்கமாக எழுதுகிறார்.