உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

புகழ் மாலை


நம்மொழிப் புலமை யெல்லாம்
          நடுத்தெருப் புலமை யாகும்
செம்மொழி பேசி வந்த
         திருமறை மலையார் பெற்ற
மும்மொழிப் புலமை யன்றோ
         முற்றிய புலமை; அன்னார்
தும்மலும் கல்வித் தும்மல் !
         தூக்கமும் கல்வித் தூக்கம் !

மறைமலை கற்ற நூற்கள்
         மற்றவர் கற்றாரேனும்
மறைமலை கண்ட நுட்பம்
         மற்றவர் கண்ட தில்லை !
மறைமலை இயக்கம் நாட்டின்
         வரலாற்றை வளர்க்கும் ! நாக
மறைமலை சேர்த்த கீர்த்தி
         வாடாத கீர்த்தி யாகும் !

முல்லைக்கோர் காடு போலும்
         முத்துக்கோர் கடலே போலும்
சொல்லுக்கோர் கீரன் போலும்
         தூதுக்கோர் தென்றல் போலும்
கல்விக்கோர் கம்பன் போலும்
         கவிதைக்கோர் பரணர் போலும்
வில்லுக்கோர் ஓரி போலும்
        விளங்கினார்! வென்றார் !நின்றார் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/18&oldid=1871710" இலிருந்து மீள்விக்கப்பட்டது