உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

23


பங்காருப் பத்தரிடம் பயின்று; மீசை
           பாரதியைப் பின்பற்றி நடையை மாற்றிச்
சிங்கார வேலவனைப் பாடிப் பின்னர்
           சீர்த்திருத்தத் துறைகண்டு பெரியா ருக்கோர்
நங்கூரம் போன்றிருந்து பிரிந்து; காஞ்சி
            நல்லறிஞர் கழகத்தால் பெருமை பெற்றுத்
தங்காமல் விரைந்தோடும் நீர்போல் ஓடித்
            தரித்திரத்தில் சரித்திரத்தை முடித்துக்கொண்டார்.

வெடித்தவுடன் விரைந்தோடும் ஆம ணக்கின்
            விதையென்றால் பாரதிக்குப் பொருந்தும்; கீழே
அடித்தவுடன் மேலெழும்பும் பந்தென் றிட்டால்
            அதுபுரட்சிக் கவிஞருக்கே பொருந்தும்; வீரம்
தொடுத்தமைத்த பாவேந்தர் பாடல் மக்கள்
            துணைக்குதவும் தொகைப்பாடல் வல்வில் ஒரி;
விடுத்தகணை தவறியதே இல்லை! வேந்தர்
            வெடிமருந்துக் கவிதைகளும் தோற்ற தில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/25&oldid=1871717" இலிருந்து மீள்விக்கப்பட்டது