உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

புகழ் மாலை

சிந்துக்குத் தந்தை

பாட்டுப் படையலினால் – புதுப்
             பாதையைக் காட்டியவன்;
சீ்ட்டுக் கவிதையினால் – சில
             செய்திகள் சொல்லியவன் ;
பூட்டுக் கவிதைகளை – வியப்
             பூட்டிடப் பாடியவன் ;
வேட்டை அரசனைப்போல் – அவன்
              வென்று விளங்கியவன்

தந்தைக்குக் கால்களவன் – பெற்ற
              தாய்க்கிரு கண்களவன்;
பந்துக்குக் கைகளவன் – பெண்கள்
              பார்வைக்குக் காமனவன்.
அந்திக்குத் தென்றலவன் – வைகை
              ஆற்றுக்குப் பாலமவன்;
சிந்துக்குத் தந்தையவன் – செய்யுள்
               சிங்கத்தின் சிங்கமவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/26&oldid=1871718" இலிருந்து மீள்விக்கப்பட்டது