உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

25


மன்னவன் பேரவையில் – கவி
            மாலை தொடுத்தவனாம்;
கன்னியர் மார்பினிலே – தினம்
            கண்ணைப் பதித்தவனாம்;
தென்னவன் அன்னவனாம் – சதைச்
            சேற்றில் விழுந்தவனாம்;
அன்னவன் பொற்கட்டியாம் – அவன்
            அண்ணா மலைரெட்டியாம்.

வாசல் நிலவுகளாம் – நய
            வஞ்சக வஞ்சியரின்
ஓசை உதடுகளில் – அவன்
             ஒத்திகை பார்த்துவந்தான்.
ஆசை அரங்கத்திலே – எழில்
             அங்கச் சுரங்கத்திலே
பூசை புரிவதுதான் – பெரும்
             புண்ணியம் என்றிருந்தான்.

யாப்பு முறையறிந்தோன் – அரை
             யாப்பெனும் நோய்வழக்கின்
தீர்ப்பில் தளர்ந்துவிட்டான் – உடல்
             தேய்ந்து மெலிந்துவிட்டான் !
காப்புக் கவியரசன் – நெடுங்
             காலம் உயிர்வாழும்
வாய்ப்பை இழந்துவிட்டான் – பிணி
             வந்து மடிந்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/27&oldid=1871719" இலிருந்து மீள்விக்கப்பட்டது