உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

27

அரசியல் அரிச்சந்திரன்


கூன்விழுந் திருந்த நாட்டின்
       கூனலை நிமிர்த்த வந்த
வான்புகழ்த் தலைவ ரான
             வ.உ.சி. புரட்சி செய்ய
நான்வரு கின்றேன்.என்று
              நவின்றவ ராவார். இன்பத்
தேன்சுவைக் கவிஞ ராவார்.
              தென்னாட்டுத் திலக ராவார்.

வடக்கே ஒர் திலகர்; தெற்கே
              வ.உ.சி. இல்லை என்றால்
விடுதலை வேக மிங்கே
              வீழ்ச்சியுற் றிருக்கும். மேலும்,
படிக்கட்டு தன்னில் குந்திப்
               பழங்கதை பேசும் நாட்டில்,
கொடுப்பதை வாங்கும் பிச்சைக்
               கொள்கைதான் வளர்ந்தி ருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/29&oldid=1871721" இலிருந்து மீள்விக்கப்பட்டது