உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

29


கனிதரும் மரங்கள், அந்தக்
            கனிகளைப் புசிப்ப தில்லை.
தனிச்சுடர் வழங்கும் தீபம்
             தனக்காக எரிவ தில்லை.
மனிதருள் சிறந்தோ ரெல்லாம்
             மற்றவர்க் காக வேண்டி
அனைத்தையும் இழப்பர். வாழ்வில்
             அனைத்தையும் இழந்தார் பிள்ளை.

தகுதியும் திறனும் கொண்ட
              தலைவனே வெற்றி காண்பான்.
அகரமே முதலில் நிற்கும்
              அவர்நின்றாார். சிறந்த முத்து,
மகரமீன் தலையி லன்றி
               மற்றமீன் தலையில் என்றும்
அகப்பட்டு விடுவ தில்லை
               அவர்போன்றார் இப்போ தில்லை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/31&oldid=1871724" இலிருந்து மீள்விக்கப்பட்டது