பக்கம்:புகழ்மாலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

புகழ் மாலை


கவிதைத் தலைவர் நேரு


சுவைகண்டார் இலக்கியத்தில்; துணைகண்டார்
        திருமணத்தில் தொடர்ந்து சுற்றிப்
புவிகண்டார்; விந்தைபல இவர்கண்டார்;
       வெளிநாட்டுப் புரட்சி கண்டார்.
கவிகொண்ட உரைநடையில் கடிதங்கள்
      எழுதிநமைக் கவர்ந்து கொண்டார்.
எவர்கண்டும் காணாத மிகப்பெரிய
      கூட்டத்தை இவரே கண்டார்.

பச்சிலைபோல் குளிர்ந்தவுளம் இவர்பெற்றார்.
       பேரறிஞர் பழக்கம் பெற்றார்;
விச்சையெனும் கல்வியினை மேன்மேலும்
      ஆராய்ந்து விளக்கம் பெற்றார்;
உச்சியெனும் உயர்ந்தநிலை இவர்பெற்றார்
      உலகத்தில் உயர்வு பெற்றார்;
எச்சமெனும் புகழ்பெற்றார்; இந்திரா
      காந்தியையும் இனிது பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/32&oldid=1491646" இலிருந்து மீள்விக்கப்பட்டது