உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

33


கூம்பலும் சோம்பலும் கூடாதென்றார் – வெறும்
              கூச்சலில் வண்டியும் ஓடாதென்றார்
சாம்பல் எரியுமோ மீண்டுமென்றார் – புதுச்
              சாதனை அல்லவோ வேண்டுமென்றார்.

இந்தியா சிறந்த தேசம்
               இல்லையா ? என்று கேட்பர்;
இந்திய நாட்டில் ஏழ்மை
               இல்லையா ? என்று கேட்பேன்.
இந்தியா வாழ வேண்டும்;
                இரணியன் இறந்த நேரம்
அந்தியா ? பகலா ? என்னும் ?
               ஆராய்ச்சி இன்றா தேவை?

இல்லையே என்று மக்கள்
               ஏங்குதல்; எங்கள் வாழ்வு
தொல்லையே துயரே என்று
               சொல்லுதல்; சிலர்நம் நாட்டில்
கொல்லைப்பூ வாசம் வீசக்
               கூடத்தில் ஊஞ்ச லாடல்
நல்லதா ? இந்தப் போக்கு
               நாட்டுக்குத் தேவை தானா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/35&oldid=1871861" இலிருந்து மீள்விக்கப்பட்டது