உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

34


காட்டுக்கு முன்கா லத்தில்
             கமண்டல முனிவர் தேவை
ஏட்டுக்குத் தேவை என்ன ?
             எழுத்தாணி. ஆனால் இன்றோ
காட்டுக்குத் தேவை, நல்ல
             காவலே யாகும். பாடும்
பாட்டுக்குத் தாளம் தேவை.
             பணத்திற்குத் திட்டம் தேவை.

எனவேதான் புதிய சட்டம்
             இயற்றினோம். பொருளா தாரத்
தனிவேதம் எழுதா விட்டால்
             தளராதோ நமது நாடு ?
கனிபோதும் அணிலுக் கெல்லாம்;
             கயல்போதும் கொக்குக் கெல்லாம் ;
மனம்போது மென்ப தில்லை
             என்பதால் வகுத்தோம் சட்டம்.

என்றுநம் நேரு சொன்னார்.
            இந்திய நாட்டு மக்கள்
முன்னேற வேண்டு மென்று
            முழுமூச்சாய்ப் பாடு பட்டார்.
தென்மொழித் தமிழ்போல்; வீசும்
            தென்றல்போல் சிறந்த நேரு,
நன்மையின் தூதர் ! பேச்சு
            நாயகர் ! நாட்டின் தீபம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/36&oldid=1871862" இலிருந்து மீள்விக்கப்பட்டது