உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

35


நாகரி கத்தின்வ ரம்பனார்;
             நாலுதி சைக்கும்வ ரம்பானார்;
ஈகைய ளிப்பதில் கண்ணானார்;
             எல்லைவ குப்பதில் கண்ணானார்.
பாகமெ னெச்சம நேரானார்;
             பண்பில்ப ழுத்தவர் நேரானார்;
தாகந்த விர்ப்பத்தில் நீரானார்;
             தம்முடல் வெந்தவர் நீறானார் !

பாரினில் மேருவும் இன்றில்லை ;
              பஃறுளி யாறும்இன்றில்லை;
தாருவில் கற்பகம் இன்றில்லை ;
              சகோட யாழும் இன்றில்லை ;
கோரிய செந்தமிழ்க் காப்பியமாம்
              குண்டல கேசியும் இன்றில்லை.
ஓரியும் பாரியும் இன்றில்லை;
              உத்தமர் நேருவும் இன்றில்லை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/37&oldid=1871865" இலிருந்து மீள்விக்கப்பட்டது