பக்கம்:புகழ்மாலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

புகழ் மாலை


பெருந்தலைவர் காமராசர்


மகராசர்!விருதுநகர் காமராசர்.
        மக்கள்படும் துயர்தீர்த்து வந்த நேசர்,
சுகங்காண விரும்புவதே வாழ்க்கை என்பர்.
        சுகமென்ன பெருந்தலைவர் கண்டார்? கையில்
தொகையுண்டா? தொகைசேர்க்க முயன்ற துண்டா?
        தூக்கமுண்டா? சோம்பேறித் தனந்தான் உண்டா?
புகைவாசம் இவருதட்டில் வந்த துண்டு.
        பொடிவாசம் இவர்மூக்கில் வந்த தில்லை.

அச்சத்தில் சிலர்நின்ற நேரந் தன்னில்
        அசையாமல் இவர்நின்றார். பணங்கா சென்னும்
மிச்சத்தில் சிலர்நின்ற நேரந் தன்னில்
        விடுதலைப்போர்ப் படைநடுவில் நின்றார். வாழ்வின்
உச்சத்தில் சிலர்நின்ற நேரந் தன்னில்,
        உழைக்கின்ற தோழர்களின் அருகில் நின்றார்.
எச்சத்தில் சிலர்நின்றார். மனைவி மக்கள்
        இல்லாத காரணத்தால் தனித்து நின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/38&oldid=1491652" இலிருந்து மீள்விக்கப்பட்டது