இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
புகழ் மாலை
விவேகானந்தர்
கடவுளைக் கண்ட துண்டா ?
காட்டுவீர் எனக்கு என்று;
தடபுட லாகக் கேட்ட
சரித்திரக் கேள்விக் காரன் ?
படித்தவன்! பட்டா தாரி!
பார்புகழ் துறவி; சாதிக்
கொடுமையை வேர றுக்கும்
கொள்கையோன் ; பிரமச் சாரி!