பக்கம்:புகழ்மாலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

43


திருத்தொண்டர் மாலை; தேசிகர் தோத்திரம்
முதலிய நூல்களின் மூலம், பெரும்புகழ்
கொண்டவர் புதுவை குமார பாரதி.

ஊடல் பதிகமோ உதட்டுப் பதிகமாம்;
உதட்டுப் பதிகமோ உறவுப் பதிகமாம்.
ஊடலால் ஏற்படும் உணர்ச்சியும் உறவும்,
பக்தி வழிக்குப் பயன்படா தென்பதால்,
ஊடல் பதிகத்தை ஒதுக்கித் தள்ளிக்
கூடல் பதிகம் பாடிக் கொடுத்தவர்
குணங்குடி கொண்ட கோவிந்த பாரதி.

புகழ்மிகு ஸ்காந்த புராணகீர்த் தனைகளும்,
பதமே கெடாத பருவப் பதங்களும்,
வேங்கைக் கும்மியும், வேறுபல நூல்களும்
கொடுத்தவர் பெருங்கரை குஞ்சர பாரதி.

வள்ளல்முத் திருளப்ப பிள்ளை அவர்களால்
மதிக்கப் பெற்றவர் மதுரகவி பாரதி.

கீர்த்தனைகள் எழுதிக் கீர்த்தியொடு விளங்கிய
கிழவர் கோபால கிருட்டிண பாரதி.

பேச்சுத் திறத்தால் பெரும்பெரும் பகைவரின்
மூச்சைத் திணறடித்த முத்தமிழ் வித்தகர்
பசுமலை சோம சுந்தர பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/45&oldid=1491624" இலிருந்து மீள்விக்கப்பட்டது