பக்கம்:புகழ்மாலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

புகழ் மாலை


இத்தனை பாரதிகள் இந்நாட்டில் இருந்தும்
ஒரே ஒரு பாரதி உயர்ந்துநிற் கின்றான்!

அவன் யார்? அவன் யார்? அவன் யார்? என்றால்,
அவன்தான், ஆங்கில ஆட்சிக்குச் சனியன்
குப்புற விழாத சுப்பிர மணியன்.

நித்திரைக் கவிஞர்க்கு மத்தியில் தோன்றிய
முத்திரைக் கவிஞன் முண்டாசு பாரதி

பெண்மீதில் ஆசை வைக்காமல் பெருந்தமிழ்
மண்மீதில் ஆசை வைத்த மகாகவி!

பா-ரதம் ஒட்டிய பாரதி பழைமையைப்
பார்-அதம் செய்கிறேன் என்ற பாரதி!

கட்டுப் படாத கவிஞன் என்றென்றும்
வெட்டுப் படாத வெற்றிக் குரியவன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/46&oldid=1491622" இலிருந்து மீள்விக்கப்பட்டது