உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

51

சோணாடு ஈந்த செந்தமிழ்ச்
செல்வம்


நெல்விளையும் தஞ்சைமா வட்டந் தந்த,
              நீல நிறச் சிற்பத்தை; வையத் தேடும்
செல்வத்தைத், தென்பகுதி சமுதா யத்தைச்
              சீர் திருத்தி வந்திட்ட நமது பன்னிச்
செல்வத்தைப் போற்சிறந்த மேதை; இந்திச்
              செகந்தன்னில் தோன்றுவது அரிது! இந்த
நல்லறிஞன், நற்குணத்தோன், குறைபா டின்றி
              நாடாளத் தகுதியுளோன் இப்போ தில்லை!


பலவகையில் தமிழர்க்கு நன்மை செய்த
             பண்பாளன் ! முன்னாள், தென் னிந்தி யாவின்
நலஉரிமைச் சங்கத்தில் பங்கு ஏற்று
             நல்லதொரு தளபதியாய் விளங்கி வந்தோன்!
இலையாகக் கொழுந்தாகப் பெரியா ரின்முன்,
             இந்நாட்டில் பலமனிதர் இருந்த போது,
மலராகப், பெரியாரே போற்று கின்ற
             மலையாக, இருந்தவர் நம் பன்னீர்ச் செல்வம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/53&oldid=1871899" இலிருந்து மீள்விக்கப்பட்டது