உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

53

மணித்தமிழ் வளர்த்த மருதப்பர்


ஐயர்கள் ஏமாற்றும் தேவர்–அவர்
                ஆரெனில், முப்பத்து முக்கோடித் தேவர்.
மெய்யாய் இருந்திட்ட தேவர் இவர்
                வெல்லுங் கவிச்சபை கூட்டிய தேவர்.
அரிவாளை ஓங்காத தேவர். அள்ளி
                அள்ளிக் கொடுத்திட்ட மருதப்ப தேவர்
விரிந்த உளங்கொண்ட தேவர்–படை
                வீரர் பரம்பரை யில்வந்த தேவர்.

அரசர் பதவிக்கு உரியர்–அறி
                வாளருடன் நேரம் போக்கும் பிரியர்.
மருதப்பர் காட்சிக்கு இனியர்–இவை
                மட்டுமன்று, இவர் மிகவும் எளியர்
மூச்செனும் தாய்மொழி காத்தோன்–பல
                மொழிதனையும் கற்று அறிவினில் மூத்தோன்.
பேச்சில் கனிச்சுவை சேர்த்தோன்–மக்கள்
                பேதத்கதைவா திட்டுப்பெரும்புகழ் சேர்த்தோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/55&oldid=1871888" இலிருந்து மீள்விக்கப்பட்டது