உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

புகழ் மாலை

சீதக்காதி

(17 ஆம் நூற்றாண்டு)

மனத்தையே மதிப்பார் உண்டு
           மதத்தையே மதிப்பார் உண்டு
தனத்தையே மதிப்பார் உண்டு
           தரணியில் சிலபேர் தங்கள்
இனத்தையே சிறந்த தாக
           எண்ணுவர்; சீதக் காதி
அனைத்தையும் மதித்து வந்தார் !
          அறிவையும் மதித்து வந்தார் !

படிப்பினில் இன்பம் கண்ட
           படிக்காசுப் புலவர் போன்ற
வடித்தநூல் வல்லார்க் கெல்லாம்
           வழங்கிய முஸ்ஸீம் வள்ளல்
கொடுப்பதில் குமண னாகிக்
           கூர்மையில் அக்ப ராகி
அடுக்கிய உலகம் மூன்றாம்
            அங்கெல்லாம் கீர்த்தி பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/6&oldid=1871700" இலிருந்து மீள்விக்கப்பட்டது