உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

5

உமறுப் புலவர்
(17ம் நூற்றாண்டு)


அமுதத் தமிழ்க் கலைஞர்
            அழகு நடையறிஞர்
உமறுப் புலவரடீ – கண்ணம்மா
            உவமைக் கவிஞரடீ !

சீறாப் புராண மதைத்
            தீட்டிய செல்வரடி
மாறாப் புலவரடி – கண்ணம்மா
            மற்றொரு கம்பரடீ !

செயற்கைப் புலவர்களின்
            செய்யுள் பிழைப்பதில்லை !
இயற்கைப் புலவரடி – கண்ணம்மா
            இறந்தும் சிறந்தாரடி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/7&oldid=1871699" இலிருந்து மீள்விக்கப்பட்டது