இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
புகழ் மாலை
வேதநாயகம் பிள்ளை
(1826 – 1889)
வேதனை நாயகர் வேடிக்கை நாயகர்
விண்கதை நாயகரோ – அவர்
சாதனை நாயகர் சாத்திர நாயகர்
தண்டமிழ் நாயகரே,!
சத்துசித் தானந்த தத்துவ நீதிநூற்
சாத்திரம் பாடியவர் – அவர்
புத்திசித் தானந்த போதனை கூறிய
புத்தக ஞானியவர் !
போற்றும் புதுமை புரிந்து சிறந்தவர்
பொய்யா மொழிப்பெரியார் – இளங்
கீற்று நிலாஒளி உள்ளம் வளர்த்த
கிறித்துவ பாரதியார் !