உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

7


உ.வ. சாமிநாதையர்
(1855 – 1942)


ஆதீநூல் அனைத்தும் கற்றே
            ஆழ்ந்தசிந் தனையைப் பெற்றே
நீதிநூல் வழியில் வாழ்ந்து
            நிலையான கீர்த்தி சேர்த்த
வேதநா தையர்; செய்யுள்
            வித்தைநா தையர்; நல்ல
சாதுநா தையர்; உ.வே.
            சாமிநா தையர் ஆவார்.

ஒருசிலர் எல்லாம் செய்வர்
           செய்வதை ஒழுங்காய்ச் செய்யார்.
ஒருசிலர் ஒன்றே செய்வர்.
           செய்யினும் ஒழுங்காய்ச் செய்வர்.
அரும்பெரும் செயல்கள் செய்யும்
           ஆற்றலோர் சிலர்க்கே உண்டு.
திருவளர் ஐயர் செய்த
           சேவையோ அரிய சேவை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/9&oldid=1871687" இலிருந்து மீள்விக்கப்பட்டது