உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

59

சிந்தனைச் சிற்பி – சிங்கார வேலர்


வழக்கறிஞன்! பெருந்தர்க்க வாதி! வாழும்
              மானிடர்க்கு விஞ்ஞான எண்ணம் தந்தோன்.
கிழப்பருவம் வரும்வரையில் வாழ்ந்திருந்து
              கீழ் மண்ணாய் மாறிவிட்ட உலக மேதை !
எழுத்தாளன்; பெய்மதத்தை; ஆரியத்தை;
              எதிர்த்திட்ட உளிமனிதன் அறிவில் மூத்தோன்.
முழுத்தாடி வைத்திருக்கும் பெரியாருக்கு
               மூலபலம் போன்றிருந்த மூச்சு நண்பன்!

சாத்திரத்தின் ஊழல்தனை எடுத்துக் கூறிச்,
              சத்துள்ள காரணத்தால் மாற்றஞ் செய்தோன்.
நாத்தீக மாநாட்டை முதலில் இந்த
              நாட்டினிலே நடத்தியவன்; வைதீ கத்தைத்
தீர்த்துவிட்டுத் தான்மற்ற வேலை என்று
              தினந்தோறும் அதற்காகப் பாடு பட்டோன்.
மாத்தமிழன்! மீனவர்க்கு முத்து! தெய்வ
              மனப்போக்கை மாற்றி வந்த சென்னைப் புத்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/61&oldid=1871901" இலிருந்து மீள்விக்கப்பட்டது