பக்கம்:புகழ் மாலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 13

பொருளெல்லாம் திருடர் வந்து கொண்டு போவார்;

போற்றியிதை வங்கியிலே வைப்போம் என்று தெருளுறவே அறிகின்ற நீங்கள் இந்தத்

தேகத்தில் ஆன்மதனம் இருத்தல் கண்டு மருளுகின்ற எமனுலே பறிபோ கின்ற

வகையெல்லாம் உணர்ந்தால் நீர் ஞானம் கொள்வீர்; வெருளறியா ராமசுரத் குமார யோகி c

விளம்புகின்ற இவ்வுண்மை கேட்டு நிற்பீர். 45

எத்தனைதான் கற்றலும் பிறர்க்கே ஓதி

இயல்பாக உபதேசம் செய்தா லுந்தான் அத்தனையும் பொருளாமோ? காலன் வந்தே

அடர்கின்ற போதவற்ருல் பயனும் உண்டோ? சித்தமெலாம் சிவன்பாலே இருத்தல் வ்ேண்டும்;

சிந்தையினை அடக்குகின்ற திறமும் வேண்டும்; இத்தனையும் உபதேசம் செய்யா நிற்பான் - எழில்ராம சுரத்குமார் என்னும் யோகி. ... 46

பூதங்கள் ஐந்தாகிப் பொலியும் வீடாம்"

பொய்யுடலம் தனநமக்கே உரிய தென்றே ஏதங்கள் இல்லாமே காத்துப் போற்றி

எந்நாளும் பொலிவதற்கே எல்லாம் சேர்ப்பீர், நாதங்கொள் சிலம்பணிந்த பரமே சன்தன் நல்லருளைப் பெறுவதற்கே நாட கில்வீர், சேதங்கொள் வகையிதென்று செப்பு கின்றன்

தேம்பலிலா ராமசுரத் குமார யோகி. 47

புலனைந்தும் பொறிகலங்கி மாயும் காலைப்

பொருள்வந்து துணையாமோ? மலத்தால் ஆகும்

கலகமிலாத் தலமென்று துரயோர் நெஞ்சில்

கலக்கின்ற உறவன்றன் தாளை யெண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/20&oldid=597111" இலிருந்து மீள்விக்கப்பட்டது