பக்கம்:புகழ் மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 21

தேனெனவும் அமுதெனவும் உரையைச் சொல்லித்

தித்திக்கப் பேசுவான்; பாலை யீவான்;

வானவரும் புகழருணே நகரில் வாழும்

மதிசிறந்த ராமசுரத் குமாரன் தானே. 73

கல்லேனும் உருக்குகின்ற தகையன், நெஞ்சில்

களங்கமிலான்; எஞ்ஞான்றும் நன்மை பேசிச் சொல்லேறும் படிஅன்பர் உளத்துள் வைத்துச்

சொருபமதைக் காட்டுகின்ருன்; ஞான மூர்த்தி: மல்லேறும் திண்தோளால் பயன்தான் உண்டோ?

வகையுறவே கல்விகற்ருல் பயனும் உண்டோ? அல்லாரா வகைஞானம் பெறவே காட்டும்

அவன்ராம சுரத்குமா ராகும் மேலோன். 74

தலையினிலே பாகையினைத் தரித்தான்; ஆங்கே தாடியுண்டு; வெண்மைநிறம் மேவ லுண்டு, கலையினிலே காணுத உண்மை யெல்லாம் -

காட்டுகின்ருன் தன்னிலையை நாட்டு கின்றன்; அலைவடக்கும் மனம் சாந்தி பெறவே வைப்பான்;

அருணையினில் எஞ்ஞான்றும் திகழும் யோகி, நிலையுறற்கே இவனே வந்து பணிந்தால் அக்கால்

நீண்டசுகம் கண்டிடலாம் வம்மின் வம்மின், 75

காயத்தைப் பெற்றுவிட்டோம், விரக நோயால்

கலங்கிப்பின் மாளாமே ஞான மென்னும் தோயத்தால் நன்னெஞ்சைக் கழுவி உற்ற

சுகந்தன்னைக் கண்டிடவே வழியைச் சொல்வான், மாயத்தைப் போக்குதற்கும் மலத்தை நீக்கும். வாழ்வினையே அடைதற்கும் கதியைக் காட்டி நேயத்தால் சிறக்கின்ற தூயோன் எங்கள்

நின்மலளும் ராமசுரத் குமார யோகி, - 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/28&oldid=597126" இலிருந்து மீள்விக்கப்பட்டது