பக்கம்:புகழ் மாலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புகழ் மாலை

மண்ணுளும் அரசரெலாம் எங்கே போளுர்?

மதிபடைத்த பெரியரெலாம் எங்கே வாழ்வார்? விண்ணுளும் தேவருக்கும் இறுதி யுண்டால்:

வேதாந்த சித்தாந்த முடிவு தன்னக் கண்ணுளன் ராம சுரத் குமாரன் காட்டிக்

கருணைசெய்வான்; அருணேயெனும் பதியில் வந்து திண்ணுர மனமடக்கும் செய்கை காண்பீர்,

தேவ னிவன் என்றிவனத் தெரிசிப் பீரே. 77

கல்லாத மாந்தர்களே யெனினும் வந்து

கமலத் தாள் பணிந்திட்டால் கருணை ஈவான்; அல்லாடும் அஞ்ஞானம் தன்னைப் போக்கி - - அருள்விருந்தை தனியளிக்கும் உயர்ந்த செம்மல்; சொல்லா டா வகைமோன நிலத்தில் நின்று

சுகம்காண வழியிதென்று சொல்லும் மெய்யன், வல்லாளன் அருணேதன்னில் மேவி வாழும்

மாதவளும் ராமசுரத் குமார யோகி, 78

பூவினிலே கலந்திருக்கும் மணத்தைப் போலப் பொற்பாரும் பாலினிலே சுவையைப் போல யாவையுமாம் அல்லவுமாம் எம்பி ரான்தான்

இயல்பெல்லாம் ஒன்றுதான் என்று சொல்வான்: சாவதனை நீக்குதற்கே வழியைக் காட்டிச் - சாந்திபெறும் நிலையினையும் சொல்லி நிற்பான்; ஆவதிவன் தனக்கண்டால் அருளே சாரும்

அருணை நகர் ராமசுரத் குமாரன் அன்றே. 7.3%

கண்ணுக்குள் மணியாகி மணியில் நின்ற

கதிர்வீசும் ஒளியாகிக் கலந்து நிற்பான்:

மண்ணுக்குள் கந்தமாய்ப் புனலில் ஒன்றி

வளர்கின்ற சுவையாகி நின்று கர்ப்பான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/29&oldid=597127" இலிருந்து மீள்விக்கப்பட்டது