பக்கம்:புகழ் மாலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

திண்ணுற்ற மனம்கொள்ளும் பெரிய யோகி,

சீவர்களைக் கருணையினல் புரந்தாள் கின்ருன்;

தண்ணுற்ற பொழில்சூழும் அருணை தன்னில்

சார் கின்ருன் ராம சுரத் குமார சாமி.

எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நின்ற

இறைவனேயே காணலுரு மனிதர் நெஞ்சத் தெண்ணுக்குள் எண்ணமெனக் கலந்து நின்ற எம்மானைக் காணகில்லா மாந்தர் வந்தால் நண்ணுற்றே அவன்பாதம் வணங்கு கின்ருர்,

ஞானியிவன் எனச்சொல்லிப் பணிகின் ருர்கள்; அண்ணுற்ற சுவைப்பாலில் அமுதம் ஈவான்,

அருணை நகர் ராம சுரத் குமார யோகி.

தாயாகிப் பால் தந்து பசியைத் தீர்ப்பான்;

தந்தையாய் ஞானமொழி பேசி நிற்பான்; வாயாத இன்பமெல்லாம் நேரக் காட்டும் -

வள்ளலெனத் திகழ்கின்ருன்; அன்பர் மாட்டுச் சேயாக நிற்கின்ரு ன், ஆங்கி லத்தில்

செப்புகின்ருன்; மழலைமொழி தமிழில் பேசி நாயோடும் அன்புசெய்து நலத்தைக் காட்டும்

நல்லவளும் ராம சுரத் குமார யோகி.

நாய்குரைக்கச் சிரிக்கின்ருன், சாய்பா பாவாம்

நாமமதற் களித்தன் பின் நலம்செய் கின்ருன்;

பாயிருக்க மேலிருந்தே, பணிவார் தங்கள் ,

பவமெல்லாம் போக்குகின்ருன்; பரம ஞானி;

நோயிருக்க மருந்துண்டு சுகம்காண் பார்போல்

80

& I

&盛

நுட்பமுறும் பொருளறிந்தே இன்பம் காண்பார்:

வாயிருக்கும் சொல்லாலே மயக்கம் போக்கும்

வள்ளலவன் ராமசுரத் குமார நாதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/30&oldid=597128" இலிருந்து மீள்விக்கப்பட்டது