பக்கம்:புகழ் மாலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 25

வென்றுவிடும் பொறியெல்லாம் அடங்க என்றும்

மெய்யான உபசாந்தம் மேவு கின்ருன்

நன்றருளும் ராமசுரத் குமார யோகி

நண்ணுவார்க் கின்ப நலம் பண்ணு வானே. 87

சாதியெனும் பேதமிலாச் சதுரன், ஞான

சாத்திரங்கள் ஒதரிய பெரியோன், என்றும் பூத லத்தில் மெய்ஞ்ஞானி இவனே என்னும்

பொற்புடையான், புகழெல்லாம் மேவு கின்ருன்: யாது மற்ற பொருளாக இருக்கும் அஃதை

இன்னதெனக் காட்டுகின்ற சதுரன், என்றும் காதலுற்ற அருணைநகர் தன்னில் மேவும்

கனவானும் ராமசுரத் குமார யோகி. 88

தலையினிலே பாகையினைத் தரிக்கின் முனல்:

தங்குகையில் விசிறியினைப் பரிக்கின் ருளுல்: கலேயினிலே காணுத இன்ப மெல்லாம்

காட்டுகின்ற பேராளன், ஆராய் வார்கட் கலேதலுறும் மன மடக்கி உபசாந் தத்தை

அருள்கின்ருன், அருணே நகர் தன்னில் வாழ்வான், நிலையிதுவென் றேகாட்டும் ஈசன், என்றும் -

நேமமுடை ராமசுரத் குமார நேயன். 89

சொல்லா டாப் பெருமோன வெளியில் நின்று சுத்த சிவ சாயுஜ்ய பதவி தந்து, - மல்லாடா வகைபொறியை அடக்கி என்றும்

மாதவத்தைச் செய்கின்ற மேலோர் வந்து நல்லானம் இவனென்றே பணிகின் ருர்கள்;

ஞானியென்றே போற்றிசெய்து வாழ்த்து கின்ருர்: எல்லாரும் காணுகின்ற கோலம் உள்ளான்

இசையருணை ராமசுர்த் குமார மேலோன். 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/32&oldid=597130" இலிருந்து மீள்விக்கப்பட்டது