பக்கம்:புகழ் மாலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 29

அணியாரும் அவர்க்கேநல் உபதே சத்தை

அளிக்கின்ருன், அருணே நகர் வாழும் யோகி

திணியான மனச்செல்வன் என்றே சொல்லும்

சீகரனம் ராம சுரத் குமார ஞானி. 1 0 }

கடலெல்லாம் நீரிருந்தும் குடிக்கப் போமோ?

கனவினிலே சுகமிருந்தும் மெய்யா குங்கொல்? உடலினிலே இன்பமென்றே இருப்பார் தங்கள் உயர் வாழ்வு வீணுகிப் போகும் அந்தோ! மடல்பெரிய மலரெல்லாம் மணத்தைக் காட்டும்;

வையத்தார் அவையெடுத்துப் போற்று கின்றர்; திடமுடைய மெய்ஞ்ஞானம் சேரு மென்றே

செப்புவான் ராமசுரத் குமார நாதன். I () 2

கோயிலுக்குள் இருக்கின்ற சாமி தன்னைக்

கும் பிட்டால் உடன்சுகத்தைத் தருவான் கொல்லோ? நோயிருக்க உடம்புக்குச் சுகமுண் டாமோ?

நுட்பமாம் பொருளறியா தஞ்ஞா னத்தின் வாயிருக்கும் மனிதர்கட்கு நன்மை யுண்டோ?

வாய்மையிதைச் செப்புகின்ருன், அருணை தன்னில் பாயிருக்கும் அன்புடைய ஞான யோகி,

பரமார்த்த ராமசுரத் குமார நாதன். 10 3

பாம்படக்கும் மந்திரத்தைக் கற்று ளார்கள்;

பனியடக்கும் போர்வையினைப் போர்த்து ளார்கள்: தீம்படக்கும் வகையின்றி மனத்தி னுள்ளே

சிலுகிடும்அஞ் ஞானத்தைப் போக்க கில்லார் ஆம்பெரியர் ஆவாரோ? ஞானத் தாலே

அருள்பெற்ருர் பெரியர் என அறைகின் முனல் ஏமத்தால் மிகப்பெரியோன், அருணே மேவும்

இயல்புடைய ராம சுரத் குமார நாதன். I 04

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/36&oldid=597135" இலிருந்து மீள்விக்கப்பட்டது