பக்கம்:புகழ் மாலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புகழ் மாலை

சீலமுடைப் பெரியோனும் இவன்பால் சென்றே

சிந்தை மிக மகிழ்ந்துருகி நிற்பீர் ஆயின்,

காலனெனும் பகைதன்னை யோட்டு தற்கே

கதிகாட்டி நலம்செய்வான் கண்டீர்; என்றும்

பாலனைப்போல் சிரிக்கின்ருன்; பாலை ஈவான்;

பந்தமெலாம் போக்குதற்கே பகரு கின்ருன்;

ஆலமெலாம் அமுதாக்கும் ஐயன், எங்கள்

அன்பனுயர் ராமசுரத் குமாரன் தானே. 1 12

கசடழித்து மெய்ஞ்ஞானக் கோலை ஒச்சிக்

காவியுடை அணியாமல் வெண்மை பூண்டு திசைதிருப்பும் மனந்தன்னை யாட்கொள் கின்ற

தெய்வம்போல் அருள்தருவான், அருணை மேவும் வசைகளற்ற பெரும்புகழான் ஞான யோகி,

மாநாமம் ராம சுரத் குமாரன் என்பான், அசைதலற்ற சாந்தநிலை மேவ வேண்டின்

அவனடியே தஞ்சமென அண்மின் நீரே! I 13

சித்தனிவன் ஆலுைம் சித்தி யெல்லாம்

செய்வதுதான் வீண் என்றே செப்பு கின்ருன்; சித்த மதை யொடுக்குகின்ற சித்தி யொன்றே

சித்தியாம் எனச்சொல்லி நகைக்கின் முனல்; சித்தனிவன் தனைப்போல ஞானி யெங்கே

சிறியேங்கள் கண்டிடலாம்? அருணே தன்னில் வித்தன் என அருள்தன்னை ஈட்டு கின்ற

மேலோனும் ராமசுரத் குமார ஞானி. - 114

கடுகதனைப் பெரிதாக்கி மலையைப் போலக்

காட்டுகின்ற சித்தெல்லாம் என்ன வாகும்?

படுகின்ற துயர்போமோ? காலன் வந்தால் -

பாசத்தால் கட்டும்போ தவற்ருல் என்னம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/39&oldid=597139" இலிருந்து மீள்விக்கப்பட்டது