பக்கம்:புகழ் மாலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. புகழ் மாலை

பகர்கின்ற சொல்லில் எல்லாம் பொருளை வைத்துப்

பார்த்திட்டால் தனிஞானம் இருத்தல் தோன்றும்; நிகர் இல்லாப் பரம்பொருளைச் சொல்லுக் குள்ளே

நிறுத்தஓர் வழியுமுண்டோ? மோனந் தன்னில் சிகரமுறும் ஞானமெனும் மலைமேல் நின்ருல்

தீர்வரிய மாயை.எல்லாம் ஒடிப் போகும்: பகருமிதை உணருங்கள் என்று சொல் வான்

பயமகற்றும் ராமசுரத் குமார யோகி. 另4、

காட்டுகின்ற பொருள் எல்லாம் பொய்யா ய்ப் போகும்:

கனவினிலே தோற்றுகின்ற காட்சி போல்ாம்; பூட்டுகின்ற பணியெல்லாம் மங்கிப் போகும்;

புசிக்கின்ற உணவெல்லாம் மலமாய்ப் போகும் வீட்டடையும் நெறியதனை நினைந்தே என்றும் விமலனவன் திருத்தாளேச் சார் மின் என்று காட்டுகின்றன், அருணைநகர் தன்னில் வாழும்

கவிஞரும் ராமசுரத் குமார ஞானி. 344、

எடுத்துக்காட் டால்சொல்லும் பொருள்அல் தன்றி

எல்லாமாய் அல்லது மாய் இருக்கின் ருனே மடுத்துச்சொல் வதற்குமோர் சொல்தான் உண்டோ?

வாய் திறக்க வழியுண்டோ? மோன ஞானம் அடுத்தங்கே உயர்நிலையில் இருக்கும் காலே

அடைகின்ற அநுபவந்தான் உண்மை யாகும்; மடுத்தறியாப் பேரின்ப வாழ்வு காட்டும்

மாண்பினனும் ராமசுரத் குமார யோகி. 245.

கனத்த அருள் கொழிக்கின்ற கண்ணைக் கொண்டான்;

கரதலத்தில் ஒடெடுத்தே பாலை உண்டான்: சினத்தினிலே செல்லாத செம்மை -ವr67Tir:

சிவமதையே உள்ளத்தில் சிறைவைத் துள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/77&oldid=597183" இலிருந்து மீள்விக்கப்பட்டது