பக்கம்:புகழ் மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

2

2

புகழ் மாலை

ஒமென்னும் எழுத்துக்குள் ஒருபொருளாய் நுட்பமாம் ஒன்றை உன்னி - நாமென்றும் காணுதற்கு வலியில்லேம்:

என்ருலும் நடலை நீக்கி ஆமென்று சொல்வதற்கோர் ஞானியுளான் அவன்தான் அண் ணுமலைக்கண் - சேமமுறும் ராமசுரத் குமாரனெனும் திருப்பெயர்கொள் சிறந்த ஞானி,

கண்டாலும் கேட்டாலும் கண்டறியார் மிகவிரிந்த காசி னிக்கண் - விண்டாலும் தேறறியார் அவர்கண்டால்

வியப்புள்ளே வீழ்ந்து மூழ்கிச் சண்டாளத் தகைமையெல்லாம் போகநின்று.

சாந்தநிலை சார்வார் அன்ருே? விண்டாரால் அறியலுறும் ராமசுரத்

குமார்செய்யும் வித்தை இஃதே.

வந்தார்க்குத் தாய்போலப் பால்தருவான்.

பழம் தருவான்; மனம் அ டக்கக் கந்தாகும் விரகென்னும் அன்பினையே

சொல்கின்ருன்; காதல் செய்மின்; எந்தாயாய் எந்தையாய்க் குருவாகித் தெய்வமாய் இருக்கும் அப்பன், கந்தாடும் பொருளறிந்த ராமசுரத்

குமாரென்னும் கவிஞர் யோகி.

நாடாத நாட்டமெல்லாம் நாடுகின்றீர்;

எந்நாளும் ஞாலம் தன்னில் - ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகின்றீர்;

அதேைல அமைதி உண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/9&oldid=1477007" இலிருந்து மீள்விக்கப்பட்டது