பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 27

‘என்ன என்ன விஷயம்? என்றான். நான் திருதிருவென விழித்தேன். ஏனய்யா இப்படிக் கூச்சல் போட்டு, பஸ்ஸை நிறுத்தச் சொன்னிங்க?’ என்று என் பக்கத்திலிருந்தவன் கேட்டான். என்ன சொல்வது? எனக்கு ஒரே குழப்பம். பரிதாபகரமாக விழித்தேன். தூக்கக் கலக்கம் போலிருக்கு: என்ற கண்டக்டர் ரைட், போகலாம்!” என்றான். பஸ் ஒட ஆரம்பித்தது. என் மனசு சரியில்லாது போய்விட்டது. தூக்கக் கிறக்கத்தில் சொப் பணத் தடுமாற்றம்தானா? அரைகுறை விழிப்பு நிலையில் வெறித்தனம் செய்த கூத்துதானா? புரியவில்லை.

என் மனமே என் அறிவைக் காலை வாரி விட்டு’ விழவைக்கிற வேளைகள் இப்படி எத்தனை எத்தனையோ! ஒரு சந்தர்ப்பத்தில் என் முதுகுத்தோல் பிய்ந்து போயிருக்க வேண்டும்தான்! நல்ல காலமாகத் தப்பினேன்.

மாலை நேரம். நான் சும்மா உலா போய்க்கொண் டிருந்தேன். எதிரே ஒரு பெண்வந்தாள். இளம்பெண், வட்ட முகம். மூக்கும் முழியும் எடுப்பாக நன்றாகத்தானிருந்தாள். முகத்தில் சிரிப்புகளை. என்னைக் கண்டு சிரிப்பது போலி ருந்தது. எதிர் வெயில் அவள் முகத்துக்கு ஒரு ஜீவனும் விசேஷ அழகும் பூசியது. அவளை நான் முன்பே அறிந்தி ருந்தேன் என்று என் மனசுக்குப் பட்டது. உறவினர் வீட்டுக்கு அருகில் வாடகைக்குக் குடியிருப்பவள் போல் தோன்றியது. அவள் என் அருகில் வந்ததும், என்ன செளக்கியமா? ஏது இந்தப் பக்கம்? என்று விசாரித்தேன். அவள் பார்த்தாள் நான் சும்மா சிரித்து வைத்தேன். மூஞ்சியைப் பாரு தனியாப் போற பொம்பிளையைப் பார்த்து சிரிச்சுக்கிட்டு பேச்சு கொடுக்கிற தைப் பாரு கரிக்கொல்லன்!” என்று கத்தினாள். து என்று காறித் தரையில் துப்பிவிட்டு நடந்தாள். எனக்கு வெலவெலத்தது. என் நெஞ்சு திக்திக்கென அடிக்கலாயிற்று.