பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{30 - புண்ணியம் ஆம் பாவம்போம்!

நினைத்து அவரவர் அலுவல்களில் ஈடுபட்டுக் கிடப்பார்கள் அவர்கள் ஏமாறுகிறார்கள். இப்படி மற்றவர்கள் ஏமாற்றம் அனுபவிப்பதை எண்ணி என் மனம் கெக்கலி கொட்டிக் களிக்கும்.

நான்தான் சொன்னேனே - என் மனசில் ஏதோ ஒரு கோளாறு. “தேர் இஸ் ஸம்திங் லைக்கலாஜிக்கலி ராங் வித் யூ என்று என் நண்பர் ஒருவர் அநேக தடவை சொன்னது உண்டு. அது சரியாகத்தான் இருக்கவேண்டும்! இல்லை யெனில் என்னுள்ளே இந்த விதமான குளறுபடிகள் ஏற்படுவதேனோ?

விழிப்பு நிலையில் இப்படியும் இன்னும் பல் வேறு வகைகளிலும் வேலைத்தனங்கள் பண்ணுகிற மனம், என் தூக்க நேரங்களில் இஷ்டம் போல் சித்து விளையாட்டுக்கள் புரிகிறது. நிஜ நிகழ்ச்சிகள் போல் இயங்க வைத்து, உணர்ச்சி களை முறுக்கிவிட்டு, என்னைக் குழப்பமுற்றுத் திண் டாடவும், அச்சமுற்று அலறவும் தூண்டி விடுகிறது மீள முடியாத இக்கட்டுகளில் சிக் கித் திணறி நான் பயந்து தெளிவாகக் கூச்சலிடுவதாக நம்பிக் கொண்டு கூவ, எனது தூக்க நிலையில் என்னிடமிருந்து கிளம்புகிற தெளிவற்ற, அர்த் தம் புரியாத, அலறல் ஒலங்களைக் கேட்டு மற்றவர்கள் தூக்கம் கெட்டுப் பயந்து விழித்தெழுந்து, விளக்கேற்றிக் கொண்டு என்னை எழுப்பிக் கேட்க, நான் ஒண்ணுமில்லை யே! என்றுசொல்லிக் குழப்பிய தடவைகள் ஐந்தா, பத்தா? அதிகம் அதிகமே.

இனம் புரியாத, பேச்சும் புரியாத, குண்டுத்தடிநபர்கள் குதித்தாடும் இடத்தில் நான் எப்படியோ வந்து சேர்கிறேன். அவர்கள் என்னைப் பிடித்து, கழுத்தில் கயிறு மாட்டி, தூக்கு மரத்தில் ஏற்றிக் தொங்கவிடுகிறார்கள். உற்சாகமாகக் கூச்சலிடுகிறார்கள். நான் கால்களை உதைத்துக்கொண்டு கத்துகிறேன்.