பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 183

வந்திருந்த முடிவை பாக்கியம் பிள்ளை அலசி, அரித்து அவனது நம்பரை வலையோட்டுத் தேடிக் கொண்டிருந்த போது பையன் வீட்டில் இல்லை. பத்திரிகையில் அவன் நம்பரும் இல்லை.

தந்தை மீண்டும் மீண்டும் கண்களை மேயவிட்டார். அடுக்கு அடுக்காக எண்கள் முட்டி நெருக்கி அடைத்துக் கிடந்த பத்திகளில் அவர் தேடிய அந்த எண் இல்லவே இல்லை.

பையன் ஒப்பேறவில்லை என்று நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது அவருக்கு. நம்பாமல் இருக்கவும் முடியாதே. பையன் தேறிவிடுவன் என்ற நம்பிக்கையை அஸ்திவாரமாக்கி அவர் மனம் கட்டி வந்த ஆசைக் கனவுக் கோட்டைகள் எல்லாம் திடுமெனச் சாய்ந்தும் மளமளவெனச் சரிந்தும் மண்ணாகி விட்டது போன்ற உணர்வு அவருள் கப்பியது. சனியன் புடிச்ச பய! கெடுத்துப் போட்டானே! என்று கொதித்தது அவர் உள்ளம்.

‘பய எங்கேயாவது பார்த்துக் தெரிஞ்சுக் கிட்டிருப்பான். அதுதான் பம்மிட்டான். சவத்துப்பய இப்ப மட்டும் என் முன்னாலே இருந்தா, எனக்கு வர்ற வரத்துலே, அவனைப் புடம் போட்டிருவேனா சும்மவா? பின்னே என்ன? எவ்வளவு பாடுபட்டு, பணத்தைக் கொட்டி, படிக்க வச்சேன். நல்லாப் படிச்சு பாஸ் பண்றதை விட உனக்கு வேற என்னலே வேலை? படிக்கேன் படிக்கேன்னு தினம் புத்தகத்தைப் பிரிச்சு வச்சுக் கிட்டு நீ என்ன தான் செஞ்சியோ; கண்ணை முழிச்சுக்கிட்டே தூங்கியிருப்பான் போலே. இல்லை, சொப்பனம் தினுசு தினுசாக் கண்டுக்கிட்டு இருந்தானோ! எல்லாத்தையும் கெடுத்துப் போட்டானே!” -

பாக்கியம் பிள்ளைக்கு உள்ளத்தில் பற்றி எரிந்தது. பையன் வந்ததும் அவனை வாயாற ஏசி, முதுகில் இரண்டு