பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



i

5

வல்லிக்கண்ணன்

அவர் வறண்ட சிரிப்பு சிந்தினார். “நல்ல புள்ளெதான் போ! அஞ்சு வயசுப் புள்ளெக்கி பயம் என்னட்டி பயம்? இருட்டு என்ன உன்னை முழுங்கியா போடும்?’ என்றார்.

வள்ளி ஒன்றும் பேசவில்லை. வெறும் தரையில் படுத்துக் கிடந்தாள்.

அது சுமாரான வீடு. சத்திரம் மாதிரிப் பெரியதாகவும் இல்லை; போதுமான வசதிகள் இல்லாத சின்ன வீடும் இல்லை. பழங்காலத்து வீடு. எலெக்ட்ரிக் லைட் கிடையாது. இப்போது வீட்டில் தாத்தாவும் பேத்தியும்தான். அப்பா, அம்மா எல்லோரும் வெளியூர் போயிருந்தார்கள். வள்ளி அவர்களோடு வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விட்டாள். அவள் நோக்கில் அது பெரிய வீடுதான். ஆகவே, பெரிய இடத்தில், தாத்தாவுக்குத் துணை பேத்தி; பேத்திக்குத் துணை தாத்தா என்ற நிலை.

அவள் தனியாக இருப்பது இதுதான் முதல் தடவை.

இன்றுதான் முதல் நாள். -

பகலில் எப்படியோ பொழுது போய்விட்டது. இரவு தான் தொல்லையாகவும் வேதனையாகவும் தோன்றியது பெரியவருக்கு. அதாவது, இரவில் சிறுமி தொல்லையாக மாறி, தொணதொணக்க ஆரம்பித்திருந்தாள்.

விளக்கு எரிந்துகொண்டிருந்தது. “ஏட்டி, விரிப்பிலே படேன். கீழே படுத்தபடி தூங்கிப் போயிராதே’ என்று எச்சரித்தார் பாட்டனார். -

‘மாட்டேன். எனக்கு துக்கம் வரலே’ என்று சொல்லி வள்ளி எழுந்து உட்கார்ந்தாள். ‘உனக்கு தூக்கம் வருதா, தாத்தா?”

‘இல்லை."