பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{g2 • புண்ணியம் ஆம் பாவம்போம்:

அரிசியை கஞ்சியாக்கி, இரண்டு பிள்ளைகளுக்கும் கொடுத்து வந்தாள். வெறும் கஞ்சி குழந்தைகளுக்கு இறங்கவில்லை. வீட்டு வாடகை இரண்டு மூன்று மாதங்களாக பாக்கி. குடும்பத் தலைவன் வேலையை விட்டு விட்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்றறிந்த வீட்டுக்காரன் வந்து, வாடகைப் பணம் வந்தாகணும், இல்லைன்னு சொன்னால், சாமானை எல்லாம் தூக்கித் தெருவிலே வீசிப் போடுவேன் என்று குதித்துப் போனான். செல்லம்மாளுக்கு இதனால் எல்லாம் ஆத்திரம் அதிகரித்திருந்தது.

‘பெண்டாட்டி பிள்ளைகளை வைத்துக் காப்பாத்தத் துப்பு இல்லாதவங்க கல்யாணம் ஏன் பண்ணிக்கிடணும்? குடும்பம் நடத்த ஏன் ஆசைப்படனும்? கடன்காரங்க வந்து வீட்டு முன்னாலே நின்னு கூத்தாடுற போது மானம் போகலையாக்கும்? முதலாளி ரெண்டு வார்த்தை பேசினதிலே மானம் போயிட்டுதாக்கும்?’ என்று அவள் புலம்பிக் கொண்டிருந்தாள். கூலி வேலை பார்த்தாவது சம்பாதிக்கத் தெம்பு உண்டா உம்மகிட்டே2 விறகு வெட்டியோ, மண்ணு வச்சோ, உழுது பாடுபட்டோ அன்னன்னைக்கு ஏதாவது தேடிக்கிட்டு வந்து பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாத்த முடியுமா உம்மாலே? உமக்குத் தெரிஞ்சது - உம்மாலே முடிஞ்சது பலசரக்குக் கடை அலுவல்தானே? அதை ஏன் விடணும்? வேலையை விட்டு நாலு நாளாச்சு. வீட்டிலே மூதேவி தான் குடியிருக்கு. இன்னைக்கு ராத்திரி பிள்ளை களுக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்றது...? அவள் புலப்பம் இப்படி வளர்ந்து பெருகியது. -

வெயிலில் எங்கெங்கோ திரிந்து விட்டு வேலையும் இல்லை, காசும் இல்லை, இனி என்ன செய்வது என மனம் குமைந்து வீடு நோக்கி வந்த ராமலிங்கத்துக்கு வீட்டில் அமைதியும் கிடைக்காது என்பது புரிந்தது.