பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 புண்ணியம் ஆம் பாவம்போம்!

ட்டாங்க...’

‘கதை போதும்’ என்றாள் வள்ளி. ‘கதை முடியல்லே. இன்னும் நிறைய இருக்கு.’ ‘இது வேண்டாம். வேறே கதை சொல்லு. இல்லேன்னா, எனக்கு அழுகை வந்திரும்.”

அவன் அழுவதை தாத்தா வரவேற்கத் தயாராக இல்லை. வேறு கதைகளைச் சொன்னார். வழக்கமான குழந்தைக் கதைகள்தான்... ஆனால் வள்ளியின் நினைப்பு குள்ளன் கதையிலேயே நிலைத்து நின்றது என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து புரிந்தது. ‘அம்மாவும் அப்பாவும் பொல்லாதவங்கதான். சின்னப் பையன்களை காட்டிலே விட்டுட்டா அவங்க என்ன செய்வாங்க? பயமா இருக்காது? பாம்பு கீம்பு கடிக்க வராது?”

அவள் பார்வை அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. திடீரென்று கத்தினாள்: ‘விளக்கைப் பெரிசாத்துண்டு. அதோ பாம்புமாதிரி என்னமோ தெரியுது...”

“சும்மா இருட்டீ. இங்கே பூச்சி கீச்சி எதுவும் வராது” என்று அதட்டினார் பெரியவர். - ‘அந்தா நீயே பாரு. சுவரு மூலையிலே. துணுக்கு அந்தப் பக்கம்...’

அவர் எழுந்து விளக்கைத் தூண்டினார். சிறுமி காட்டிய மூலையில் பார்த்தார். பழங் கயிறு ஒன்று கிடந்தது. அவளுக்குத் தைரியம் கூறினார். -

‘விளக்கு இப்படியே எரியட்டும். சுருக்க வேண்டாம்” என்று அவள் கட்டளையிட்டாள்.

“சரிசரி. கண்ணை மூடிக்கிட்டு படுத்திரு. தூக்கம் தானா வந்திரும். பயம் ஒடிப்போயிரும்” என்று உபதேசித்தார்.