பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 24

தங்கம்னு ஒரு பொண்ணு. அதுக்கு ரொம்பப் பெருமை. நாம ரொம்ப அழகுங்கிற நெணைப்பு அதுக்கு. நான் எப்படி இருக்கேன் தெரியுமா, ரோசாப்பூ மாதிரி இருக்கேனாக்கும் என்பாள்... அதும் மூஞ்சி: ரோசாப் பூவாம்!... அப்படிச் சொல்லையிலே அதுங் கன்னத்தை நறுக்குன்னு கிள்ளனும், ரத்தம் வரும் படியாப் பிறாண்டனும்னு எனக்கு ரொம்ப ஆசை ஏற்படும். பத்மாவுக்கு எப்படி இராது? இன்னிக்கு அந்தக் குரங்குத் தங்கம் வெள்ளை வெளேர்னு ஜோரா ஒரு கவுன் போட்டுக்கொண்டு வந்திருந்தது. நான்தான் ரோசாப்பூ என்று பீத்தியது. பத்மா ஒரு வேலை செய்தாள். டீச்சர் மேசை மேலே இருந்து சிவப்பு மைக்கூட்டை எடுத்தாள். அத்தனை மையை யும் தங்கத்தின் சட்டையிலே கொட்டினாள். ரோசாப்பூ சிவப் பாகத் தாண்டி இருக்கும்; இப்பதான் நீ ரோசாத்தி என்று சொன்னாள். அப்ப தங்கத்தைப் பார்க்கனுமே! சரியான செங்குரங்கு ஆகிவிட்டது. அது...’

இப்படி ஒரு நாள் மீனு சொன்னாள்.

‘டீச்சர் பத்மாவைக் கண்டிக்கவில்லையா? என்று அம்மா கேட்டாள்.

கோபிச்சாங்க. இனிமேல் இப்படி எல்லாம் செய்யப் படாதுன்னாங்க என்றாள் மீனு,

பிறகு ஜானகி சொர்ணம் பிள்ளையிடம் சொன்னாள்: இந்த பத்மா என்கிற பெண் ரொம்பவும் மோசமானதாக இருக்கும் போலிருக்குேேத. அது மற்றக் குழந்தைகளைக் கூடக் கெடுத்து விடுமே!’ -

‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அது மாதிரிக் குழந்தைகளை ஏன்தான் பள்ளிக்கூடத்தில் சேர்த்து வைத்திருக் கிறார்களோ தெரியவில்லை என்றார் பிள்ளை.

அந்தப் பெண் விஷயமாக டீச்சரைக் கண்டு பேசினால் நல்லது என்று எனக்குத் தோணுது. நம்ம மீனுவைப் பற்றி நாம்