பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 63

பாபமல்ல. நீதானிருக்கிறாய். உனக்கு உபயோகமற்ற ஒரு ஆயுதத்தை வீசி எறிகிறாய். அது தற்செயலாக ஒருவன் மீது பட்டு அவன் இறந்து போகிறான். அது தெய்வ சங்கல்பம். நீ அவனைக் கொல்ல வேணும் என்று நினைத்தாயா? கிடை யாது. வேணுமென்றே ஆயுதத்தை வீசினாயா? இல்லை. ஆகவே, உன் செயல் ஒரு உயிரின் மரணத்துக்குக் காரண மாகயிருந்தாலும்கூட, உன் செய்கை பாபமான தல்ல. அது போல்தான் நீதிக்காக உன் கடமையைச் செய்வதும், இவை யெல்லாம் சாஸ்திரங்களால் அனுமதிக்கப்பட்டவை தான். ஆகையினால், மகனே, அஞ்சாதே. மனம் கலங்காதே. கர்த்தர் உன்னைக் காத்தருள்வார்.”

போதகரின் விளக்கவுரை அவனுக்குப் பிடித்திருந்த்து. ஆனால் அவன் மனத்துக்கு அமைதி தரவில்லை.

‘மனிதனை மனிதன் ஏன்கொல்ல வேண்டும்? அது எதன் பெயராலும் இருக்கட்டும். மதம், நியாயம், யுத்தம், தேச நன்மை - எதானால் என்ன? விளைவு உயிர்க்கொலை தானே? சகோதர உயிரை ஒழிப்பது கொலை... அது பாபம் தான். சட்டம், நியாயம், தண்டனை என்பதெல்லாம் மனிதரில் சிலர் - சந்தர்ப்ப வசத்தால் உயர்ந்து விட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொண்டவை தானே? தாங்கள் விரும்பாதவர்களை ஒழித்துக் கட்ட உபயோகிக்கிற கருவிகள் தானே இவை?’

அவன் படித்தவனல்ல. எனினும் அவன் சிந்தனை விழிப்புற்றிருந்தது. எண்ணக் குமுறல் அவன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஓடத் தூண்டிக் கொண்டிருந்தது.

‘மனிதனை மனிதன் கொல்லாமல் இருக்கலாம். ஒரு பாபத்தைத் தீர்க்க, தீர்க்க முடியாத மகாப்பெரிய பாபம் ஒன்றைச் செய்வது தான் பிராயச்சித்தமா? மனிதவர்க்கம் அறியாமையால் செய்து வருகிற தவறுகளைத்தீர்க்க